ஏமன் நாட்டில் இந்திய நர்ஸ் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 'குருதிப் பணம்' ஆக 8.6 லட்சம் ரூபாய் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு வழங்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், இந்த பணத்தை பெற அந்த குடும்பத்தினர் ஒப்புக்கொண்டால் நிஷா மரண தண்டனையிலிருந்து தப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவை சேர்ந்த நிமிஷா ஏமன் நாட்டில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்த நிலையில், அவரது பாஸ்போர்ட், நகைகள், பணம் முழுவதையும் பறித்துக்கொண்ட மாஹதி என்பவரை கொலை செய்ததாக குற்றச்சாட்டு இருந்தது. இதனால் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மாஹதி குடும்பத்தினரிடம் நிமிஷா குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாததால் வரும் 16 ஆம் தேதி நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும், 'குருதிப் பணம்' ஆக 8.6 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த பணத்தை மாஹதி குடும்பத்தினர் மனம் மாறி வாங்குவதற்கு ஒப்புக்கொண்டால், நிமிஷாவின் தண்டனை ரத்து செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்னும் பணத்தை வாங்குவது குறித்து மாஹதி குடும்பத்தினர் எந்தவித பதிலையும் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.