மற்ற நாடுகளுக்கு தடுப்பூசி; இந்தியாவிற்கு வழங்காதது ஏன்? – அமெரிக்கா விளக்கம்!

Webdunia
வியாழன், 15 ஜூலை 2021 (08:35 IST)
உலக நாடுகளுக்கு அமெரிக்கா 8 கோடி தடுப்பூசிகள் வழங்கி வரும் நிலையில் இந்தியாவிற்கு வழங்காதது ஏன் என விளக்கம் அளித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகளுக்கு 8 கோடி டோஸ் தடுப்பூசிகளை வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. அந்த வகையில் சமீபத்தில் நேபாளம், வங்க தேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கியுள்ள நிலையில் இந்தியாவிற்கு மட்டும் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விளக்கமளித்து அமெரிக்கா “ஒவ்வொரு நாடும் அமெரிக்காவிடமிருந்து தடுப்பூசி பெறும் முன்னதாக உள்நாட்டு சட்ட நடைமுறை, ஒழுங்குமுறைகளை செய்து முடிக்க வேண்டும். இந்தியாவில் இந்த நடைமுறைகள் செய்து முடிக்க காலதாமதம் ஆவதால் இந்தியாவிற்கு தடுப்பூசிகள் இன்னமும் அனுப்பப்படவில்லை. விரைவில் இந்த நடைமுறைகளை இந்தியா முடித்ததும் தடுப்பூசிகள் அனுப்பப்படும்” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்