உலக நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து அழிக்கும் ஏவுகணை மற்றும் ராக்கெட் சோதனையை வடகொரியா செய்துள்ளது.
வடக்கு பியாங்கன் மாகாணத்தில் உள்ள பாங்யான் என்ற இடத்திலிருந்து சுமார் 930 கிமீ தூரம் உள்ள இலக்கை குறிவைத்து தாக்கக்கூடிய ஏவுகணையை வடகொரியா பரிசோதித்தது.
வடகொரியாவின் இந்த நடவடிக்கைக்கு ஐ.நா சபை பொதுச்செயலாளர் மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், வட கொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை தொடர்பாக விவாதிக்க ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசரமாக கூட உள்ளது.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய ஐந்து நாடுகளும் பாதுகாப்பு கவுன்சிலின் பங்கேற்கயுள்ளன.
வட கொரியா மீது பல்வேறு பொருளாதார தடைகளை ஐ.நா விதித்திருந்தாலும், தற்போது மேலும் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.