தன்னுடைய காலில் விழுந்த நபரின் காலில் விழுந்த மோடி!

Webdunia
திங்கள், 21 பிப்ரவரி 2022 (08:42 IST)
தேர்தல் பிரச்சார மேடையில் தன்னுடைய காலில் விழுந்த நபரின் காலில் பிரதமர் மோடி விழுந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் உன்னவ் என்ற பகுதியில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்து வந்தார் 
 
அப்போது  அங்கு வந்த தலித் தலைவர் ஒருவர் திடீரென பிரதமரின் காலில் விழுந்தார் இதனை அடுத்து பிரதமர் யாருடைய காலிலும் விழக் கூடாது என சைகை காட்டி திடீரென அவரது காலில் விழுந்து வணங்கினார்
 
இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்