இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே ஒப்பந்தம்: 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம்

சனி, 19 பிப்ரவரி 2022 (07:52 IST)
இந்தியா-ஐக்கிய அமீரகம் இடையே ஒப்பந்தம்: 100 பில்லியன் டாலருக்கு வர்த்தகம்
இந்தியா மற்றும் ஐக்கிய அமீரகம் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை  அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மிக அதிக அளவில் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
கடந்த சில நாட்களாக இந்தியா பல உலக நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தை செய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இடையே பொருளாதார கூட்டு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. இதனை அடுத்து அடுத்த 5 ஆண்டுகளில் 100 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் இரு நாடுகளுக்கிடையே விரிவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது
 
இதன் காரணமாக இந்தியாவில் தொழில் வளர்ச்சி பெருகும் என்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும் இதனால் பொருளாதார ஏற்றம் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்