வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப் !!

புதன், 20 ஜனவரி 2021 (20:11 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மை வாக்குகள் பெற்ற ஜோ பைடன் இன்று வெள்ளை மாளிகையில் பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில்  அதிபர் டிரம்ப் இன்று புதிதாகப் பதவியேற்கவுள்ள ஜோ பிடனுக்கு ஒரு ஹெலிகாப்டர் எதுவும் ஒதுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்தது.

தற்போது வெள்ளைமாளிகையில் இருந்து தனது குடும்பத்தினருடன் வெளியேறினார் டிரம்ப்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :

4 ஆண்டுகளாக எனக்கு ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி.எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளைக் குறைத்தேன். பைடன் ஆட்சியில் வரிகள் உயரும் என்று நான் நம்புகிறேன்.

வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப் புளோரொடாவில் உள்ள தனது சொகுசு மாளிகையில் தங்கவுள்ளார். மேலும் அவர் மிகப்பெரிய ரியல் எஸ்டேர் தொழிலதிபர் என்பதால் அத்தொழிலில் அவர் ஈடுபடவுள்ளதாகவும் தெரிகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்