வரலாற்றில் மோசமான செயல்; ஒபாமாவின் ஒப்பந்ததை நிராகரித்த டிரம்ப்!!

Webdunia
சனி, 14 அக்டோபர் 2017 (15:04 IST)
முன்னாள் அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியிலிருந்தபோது கடந்த 2015 ஆம் ஆண்டு ஈரான் நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.


 
 
இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். மேலும், ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தம் அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான ஒப்பந்தம் என்று விமர்சித்தார். 
 
ஈரான் நாட்டின் மீது பொருளாதார தடைகள் விதிக்க முடியுமா என ஆய்வு செய்து 60 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ததும், பொருளாதார தடைகள் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்