அமெரிக்காவின் முதல் குடிமகள் யார்? தொடங்கியது சக்களத்தி சண்டை

புதன், 11 அக்டோபர் 2017 (13:05 IST)
அமெரிக்க அதிபர் அந்நாட்டின் முதல் குடிமகனாகவும், அவருடைய மனைவி அந்நாட்டின் முதல் குடிமகளாகவும் கருதப்படும் நிலையில் டொனால்ட் டிரம்ப்பின் 3வது மனைவி மெலோனியா முதல் குடிமகள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார்.



 
 
ஆனால் டிரம்ப்பை திருமணம் செய்து விவாகரத்து செய்த அவருடைய முதல் மனைவி இவானா, தற்போது அமெரிக்காவின் முதல் குடிமகள் என்ற அந்தஸ்து தனக்கே வேண்டும் என்றும் நான் தான் அவருடைய முதல் மனைவி என்றும் போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்த தகவலை அவர் சமீபத்தில் எழுதிய 'டிரெம்ப்பின் எழுச்சி (Raising Trump) என்ற நூலில் தெரிவித்துள்ளார்.
 
இவானாவின் இந்த கருத்துக்கு டிரம்ப் மனைவி மெலானியா கூறியபோது, 'இவானா தனது புத்தக விற்பனைக்காக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நான் வாஷிங்டனை நேசிக்கின்றேன். நான் தான் இப்போதைக்கு டிரம்பின் அதிகாரபூர்வ மனைவி. எனவே இந்நாட்டின் முதல் குடிமகள் என்ற அந்தஸ்துக்கு கவுரவம் சேர்க்க நினைக்கின்றேன்' என்று கூறியுள்ளார்.
 
முதல் குடிமகள் யார் என்பது குறித்து முன்னாள் மனைவியும், இந்நாள் மனைவியும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை மாறி மாறி தெரிவித்து வருவதை அந்நாட்டு ஊடகங்கள் சக்களத்தி சண்டை என்று குறிப்பிட்டு கேலி செய்துள்ளன

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்