அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரொனா தொற்றா ? வெளியானது முடிவுகள் !

Webdunia
திங்கள், 16 மார்ச் 2020 (10:40 IST)
அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்ட நிலையில் இப்போது ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது சீனாவில் இதன் தாக்கம் குறைந்திருந்தாலும், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவி பல உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலியில் நேற்று ஒரே நாளில் இந்த வைரஸ் தாக்குதலுக்கு 300க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் இந்த வைரஸ் தொற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. இது தொடர்பான செய்திகள் சமூகவலைதளங்களில் விவாதமாகின. இந்நிலையில் அவருக்கு எடுக்கப்பட்ட சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என முடிவுகள் வெளியாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்