உலகம் முழுவதும் உயர்ந்தாலும் இந்தியாவில் உயராத பெட்ரோல் விலை!

Webdunia
சனி, 12 மார்ச் 2022 (07:53 IST)
உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் மூன்று மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல் விலை உயராமல் இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது. 
 
இன்று 128வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 101.40 எனவும் இன்று டீசல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இருப்பினும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்