’’இன்று புதிய நாள் ‘’அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்பு !

Webdunia
புதன், 20 ஜனவரி 2021 (21:26 IST)
உலகமே ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பிடன் 306 வாக்குகள் பெற்று பெரும்பாலான இடங்களில் வென்றுள்ளார். அவர் அமெரிக்காவின் 46 வது அதிபராகப் பதவியேற்றார்.  அவருடன் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றுக்கொண்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் பைடன் போட்டியிட்டார்.

இதில் 306 மக்கள் பிரிதிநிதிகளின் வாக்குகளைப் பெற்று  தற்போது வெள்ளைமாளிகையில் ( புதன் கிழமை காலை 11:30 மணிகு) பதவியேற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஜோ பிடம் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அமெரிக்காவுக்கு புதிய நாள் என்று பதிவிட்டிருந்தார்.

அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் இப்பதவிக்கு வரும் ஜோ பிடன் தன் வாழ்க்கையில் மிக அதிகமான சோதனைகளை எதிர்கொண்டவர். இவர் 4 வயது முதல் திக்கிப் பேசும் குறைபாடுடையவராக இருந்தாலும் அதை சமாளித்து இப்பெரிய பதவியை அடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப் புளோரொடாவில் உள்ள தனது சொகுசு மாளிகையில் தங்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்