இந்தியாவின் ராணுவ ட்ரோன்கள் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த அமெரிக்கா!

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (12:42 IST)
உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவிடம் இந்தியா  ராணுவ ட்ரோன்களை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்த நிலையில், அந்த ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது அமெரிக்க அரசு.

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அமெரிக்க நாட்டில் விரைவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இதற்கான அந்த நாட்டில் அதிபர் வேட்பாளர்களுக்கு இடையேயான போட்டி, பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.

இந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, 3 பில்லியன் டாலர் மதிப்பில் 31 ராணுவ ட்ரோன்களை அமெரிக்காவிடம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில், காலிஸ்தானி பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்கை கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்ட விவகாரத்தில், இந்தியா முறையான விசாரணையை துவங்காததாகக் கூறி அமெரிக்க அரசு இந்தியாவின் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது.

இது இரு நாடுகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்