குற்றவாளியின் கழுத்தில் பாம்பை அணிவித்து விசாரணை...

Webdunia
திங்கள், 11 பிப்ரவரி 2019 (19:09 IST)
இந்தோனேஷியாவில் குற்றவழக்கில் சிக்கிய முக்கிய குற்றவாளியில் கழுத்தில் பாம்பை அணிவித்து அவ்ர் முகத்தில் கடிக்க விடுவதுபோல் அச்சுறுத்தி போலீஸார் விசாரணை நடத்திய சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
இந்தோனேஷியா நாட்டில் உள்ள பப்புவா மாகாணத்தில் செல்போன் அதிகளவில் திருட்டு போனவண்ணம் இருந்தன. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது ஒரு குற்றவாளி பிடிப்பட்டான். 
 
அவனிடம் விசாரணை நடத்திய போலீஸார் அவன் வாய்க்குள் அல்லது ஆய்டைக்குள் பாம்பை விட்டுவிடுவதாக மிரட்டி அவனிடம் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்ததாக தெரிகிறது.
 
இது வீடியோவாக் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து விமர்சனங்கள் பலவாறு எழுந்தன . இந்நிலையில் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரிகள் மன்னிப்பு கேட்டனர். ஆனாலும் அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்