2 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் கொரோனாவால் ஒருவர் பலி: அதிர்ச்சி தகவல்..!

Mahendran

புதன், 28 மே 2025 (17:35 IST)
சென்னையில் ஒரு நபர் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தது, இரண்டு ஆண்டுகள் கழித்து முதல் முறையாக நிகழ்ந்துள்ள சம்பவமாக கருதப்படுகிறது.
 
மறைமலை நகரை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக, கே.கே. நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
 
அங்கு ஆரம்ப சிகிச்சைக்கு பிறகு, மேல் சிகிச்சைக்காக அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றும்போது, நேற்று நள்ளிரவில் அவர் உயிரிழந்தார்.
 
இந்த மரணம், கொரோனாவால் சென்னையில் பதிவு செய்யப்படும் அண்மைய மரணமாகும். இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது 1,010 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் 69 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
 
இத்தகவல் மீண்டும் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம் என்பதை நினைவூட்டுகிறது. பொதுமக்கள் முறையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியம்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்