இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கமல்ஹாசனின் கருத்துக்குத் தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கமல் சொன்னது எந்த அளவிலும் தவறில்லை. தமிழ் மொழியிலிருந்து பிறந்ததுதான் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகள். வரலாற்றை அறியாமல் பேசுபவர்களால் உண்மை மறைக்க முடியாது” என்றார்.
மேலும், “கலைஞர்களின் கௌரவம் காக்கப்பட வேண்டும். உண்மையை பேசும் போது எதிர்ப்பு வந்து தான் விடும். அதற்காக பதாகை கிழிக்கிறோம் என்றால், அது அவர்கள் அறியாமையின் விளைவே” என சுட்டிக்காட்டினார்.