ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்ததால் காதலனை குத்திக்கொன்ற இளம்பெண் !

Webdunia
திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (21:23 IST)
ஹெனான் மாகாணத்தின் ஜூமாடியன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற  கடை வீதியில் ஒரு காதல் ஜோடி நடந்து சென்ற்உகொண்டிருந்தனர்.அப்போது  வெயில் அதிகமாக இருந்ததால் ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு காதலி கேட்டுள்ளார். 
இதற்கு நீ ஏற்கனவே குண்டாக உள்ளாய்,. அதனால் இந்த ஐஸ்கிரீம் சாப்பிட்டால் மேலும் குண்டாகி விடுவாய் என காதலன் கேலி பேசியதாகத் தெரிகிறது.
 
 
இதையடுத்து  கோபம் கொண்ட காதலி, காதலரை அங்கேயே நிற்கவைத்துவிட்டு அருகேயுள்ள கடைக்குச்சென்று 2 கத்தரிக்கோல்களை வாங்கி வந்துள்ளார். 
 
காதலர் எதற்கு இது என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதுகுறித்து எதுவும் கூறாத காதலி  காதலி தன் கையில் இருந்த கத்திரிகோலால் அவரது வயிற்றில் குத்தினார். 
 
இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்து வலியால் துடித்தவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு  அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். . ஆனால் பாதி வழியிலேயே அவர் இறந்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலிஸார்  காதலரை குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற ’ஆபத்தான காதலியை’ போலீசார்  கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்