மோடியை அடுத்து அமெரிக்காவுக்கு செல்லும் நிர்மலா சீதாராமன்.. டிரம்ப் உடன் சந்திப்பு இல்லையா?

Siva

ஞாயிறு, 20 ஏப்ரல் 2025 (08:10 IST)
மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், 11 நாள்  அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடான பெருவுக்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது, அவர் ஜி20, சா்வதேச நாணய நிதியம்  மற்றும் இருதரப்பு ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கவுள்ளார் என நிதியமைச்சகம் ஒரு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. ஆனால் டிரம்ப் உடனான சந்திப்பு குறித்த தகவல் இல்லை.
 
அமெரிக்கா பயணத்தின் ஒரு பகுதியாக, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் ஹூவா் நிறுவனத்தில் 20-ஆம் தேதி உரையாற்றவுள்ளார். மேலும், முக்கிய நிதி மேலாண்மை நிறுவனங்களின் தலைவர்களையும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
 
அவர் ஏப். 22 முதல் 25 வரை வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். இதில் உலக வங்கி, ஐஎம்எஃப் மற்றும் ஜி20 நிதியமைச்சா்கள் ஆலோசனை கூட்டம் மற்றும் மத்திய வங்கி ஆளுநா்கள் கூட்டம் ஆகியவை அடங்கும்.
 
பயணத்தின் அடுத்த கட்டமாக, அவர் பெருவுக்கு ஏப். 26 முதல் 30 வரை செல்லவுள்ளார். அந்நாட்டு அதிபா் டினா போலுயார்டே மற்றும் பிரதமா் கஸ்டாவோ அட்ரியன்சன் ஆகியோருடன், நிதி, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார்.
 
மேலும், அவர் இந்தியா-பெரு வணிக ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை தாங்கி, இந்தியா மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபர்களுடன் கலந்துரையாடவுள்ளார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்