கொரோனா காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ள நிலையில் அவ்வபோது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறாக சமீபத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதில் வார இறுதி நாட்களில் கோவில் திறப்பது குறித்த அறிவிப்புடன், நர்சரி, ப்ரைமரி பள்ளிகளை திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்து அமைச்சர் அன்பில் மகேஷ் “தமிழக அரசின் அறிவிப்பில் நர்சரி பள்ளிகள் திறப்பு குறித்து வெளியான அறிவிப்பு தவறுதலாக வெளியானது. நர்சரி, ப்ரைமரி பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.