ஆப்கானிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 40 பேர் பலி

Webdunia
வியாழன், 30 ஜூன் 2016 (16:41 IST)
ஆப்கானிஸ்தானில் போலீசார் வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 40 பேர் பரிதாபமாக பலியாகியினர். மற்றும் பலர் காயமடைந்தனர்.


 
ஆப்கானிஸ்தானில் இருந்து சர்வதேச படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு அங்கு தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு நேபாள நாட்டை சேர்ந்த பாதுகாவலர்கள் சென்ற பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் பலியாகினர்.
ஆப்கானிஸ்தா தலைநகர் காபூலின் புறநகர் பகுதியில் இன்று போலீசார் வாகனங்களில் வந்து கொண்டிருந்தனர். அப்போது சில தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்டனர். 
 
அந்த தாக்குதலில் பேருந்தில் இருந்த 40 போலீசாரும் பலியாகி விட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலுக்கு தலிபான்கள் பொறுப்பேற்றிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
 
இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை சேகரித்து வருவதாக, ஆப்கானிஸ்தானின் உள்துறை செய்தித் தொடர்பாளர் சேதிக் சித்திக்கி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்