அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி தமிழில் கையெழுத்திட்டு வாழ்த்து கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,
"தாங்கள் இன்று தங்களுடைய 72வது பிறந்த நாளை கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின் கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லாம் நன்மையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன். மேலும், எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோஷத்துடனும் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று அவர் தெரிவித்தார்.