கட்டுக்கட்டாக பணம்.. அள்ளி செல்ல குவியும் மக்கள்! – இலங்கை அதிபர் மாளிகை விவகாரம்!

Webdunia
செவ்வாய், 12 ஜூலை 2022 (09:11 IST)
இலங்கை அதிபர் மாளிகையில் கட்டுக்கட்டாக பணம் கிடைத்த வீடியோ வைரலான நிலையில் மக்கள் பலர் அதிபர் மாளையில் குவிந்து வருகின்றனர்.

இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில் மக்கள் எரிப்பொருள், உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் கடந்த சில மாதங்கள் முன்னதாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்‌ஷே பதவியை விட்டு தப்பி ஓடினார். பின்னர் ரணில் விக்ரமசிங்கெ பிரதமராக பதவியேற்று நிலமையை சரிசெய்ய முயன்றார்.

ஆனாலும் நிலைமை கட்டுக்குள் வராததால் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இதனால் அதிபர் கோத்தாபய ராஜபக்‌ஷே வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியுள்ளனர். அதிபர் கோத்தாபய அங்கிருந்து தப்பி தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் அதிபர் மாளிகையில் இருந்த பதுங்கு குழியில் இருந்து சில போராட்டக்காரர்கள் கட்டுக்கட்டாக பணம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. அந்த ரகசிய அறையில் இருந்து சுமார் 78 லட்ச ரூபாயை மக்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ராஜபக்சேவின் அலுவலகத்தில் புகுந்த மக்களும் லாக்கர்களை உடைத்து பார்த்ததாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து அதிபர் மாளிகைக்கு வரும் மக்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. பலரும் அந்த ஆடம்பரமான மாளிகையில் வந்து குடும்பத்தோடு தங்கி செல்வதாகவும், பலர் அங்கிருந்த விலை உயர்ந்த பொருட்களை சூறையாடி சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்