இலங்கையின் இடைக்கால பிரதமராக சஜித் பிரேமதாஸா பதவி ஏற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன
இலங்கையில் கடந்த சில வாரங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதை அடுத்து மக்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிபர் மாளிகையை இலட்சக்கணக்கான மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அதிபர் கோத்தபயா ராஜபக்சே திடீரென தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் இலங்கையின் இடைக்கால அதிபராக சஜித் பிரேமதாசவை நியமனம் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் 20ஆம் தேதி இலங்கையின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டு அன்றே பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது