இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. நாள்தோறும் பெட்ரோல் பங்குகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் விலையும் அதிகமாக இருப்பதால் பலரும் பொது போக்குவரத்து சாதனமான பேருந்தை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.