கொரோனா பரபரப்பிலும் மீண்டும் ஆட்சியை பிடித்த ஆளும்கட்சி: தென்கொரியாவில் கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 17 ஏப்ரல் 2020 (07:26 IST)
கொரோனா பரபரப்பிலும் மீண்டும் ஆட்சியை பிடித்த ஆளும்கட்சி
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சமூக விலகல் மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றை வலியுறுத்தும் நிலையில் இந்த கொரோனா பரபரப்பிலும் தென்கொரியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தென்கொரியாவின் 21வது நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டு தேர்தலும் மிக அமைதியாக நடந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் வாக்காளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். வாக்குப் பதிவுக்கு வந்த மக்களுக்கு முகக் கவசம் மற்றும் கையுறைகள் ஆகியவை அரசின் சார்பில் வழங்கப்பட்டது என்பதும் சமூக இடைவெளியை பின்பற்றி வாக்களிக்கவும் அறிவுறுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தென்கொரியாவில் மொத்தம் 300 நாடாளுமன்ற தொகுதிகள் இருக்கும் நிலையில் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சிக்கும் எதிர்க் கட்சியான பழமைவாத கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருந்தது. இந்த தேர்தலில் இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்றே ஒரு சில கருத்து கணிப்புகள் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது ஆளும் கட்சியான ஜனநாயக கட்சி ஆரம்பத்திலிருந்தே முன்னணியில் இருந்தது. மொத்தம் உள்ள 300 தொகுதிகளில் ஜனநாயக கட்சியின் 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது என்பதும் அதன் கூட்டணி கட்சிகள் 17 இடங்களை கைப்பற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த கட்சிக்கு 180 உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. இதனையடுத்து ஆளுங்கட்சியில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்