இந்த நிலையில் ஒவ்வொரு இந்தியர்களுக்கும் ரூபாய் 15ஆயிரம் பிரதமர் மோடி தருவதாகவும் விரைவில் அனைவரது வங்கி கணக்கிலும் இந்த பணம் வரும் என்றும் ஒரு வதந்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பரவியது. ஆனால் இதில் உண்மை இல்லை என்றும் இதுமாதிரியான அறிவிப்பு எதுவும் பிரதமரிடம் இருந்து வரவில்லை என்றும் அரசு உறுதி செய்தது
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு வதந்தி காட்டுத் தீ போல் பரவி வருகிறது. இந்த வதந்தியின் ஹெலிகாப்டரில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளாக தூவ உள்ளதாகவும் இதனை மக்கள் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அந்த வதந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வதந்தியும் காட்டுத் தீ போல் அனைத்து சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது. மீண்டும் இந்த அறிவிப்பு போலியானது என்றும் இந்த வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது