உங்ககிட்ட மட்டும்தான் ஏவுகணை இருக்கா? – வடகொரியாவுக்கு எதிராக இறங்கிய தென்கொரியா!

Webdunia
வியாழன், 16 செப்டம்பர் 2021 (09:31 IST)
வடகொரியாவும், தென்கொரியாவும் ஒரே நாளில் அடுத்தடுத்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து மோதல் போக்கில் இருந்து வரும் வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக உள்நாட்டு பஞ்சம், கொரோனா உள்ளிட்ட காரணங்களால் சோதனையை நிறுத்தியிருந்த வடகொரியா தற்போது மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. 

சமீபத்தில் 1500 கிலோ மீட்டர் பயணித்து இலக்கை தாக்கும் ஏவுகணையை சோதித்த நிலையில் நேற்றும் இரண்டு ஏவுகணைகளை செலுத்தி சோதனையை நடத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று வடகொரியாவுக்கு எதிராக தென்கொரியாவும் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்