உலக போர் குண்டு வீச்சில் தப்பித்த முதலை! – மாஸ்கோவில் உயிரிழந்தது!

Webdunia
ஞாயிறு, 24 மே 2020 (12:11 IST)
இரண்டாம் உலக போரின்போது ஜெர்மனியில் வீசப்பட்ட குண்டுகளிலிருந்து தப்பித்த முதலை ஒன்று மாஸ்கோவில் உயிரிழந்துள்ளது.

அமெரிக்காவில் பிறந்த இந்த முதலைக்கு சாட்டர்ன் என பெயரிடப்பட்டது. 1936ல் ஜெர்மனியில் உள்ள பெர்லின் உயிரியல் பூங்காவிற்கு இந்த முதலை வழங்கப்பட்டது. நாஜிக்களின் தலைவர் ஹிட்லர் வளர்த்த முதலைகளில் இதுவும் ஒன்று என பல காலமாக ஒரு வதந்தி இருந்து வருகிறது. 1943ல் நடந்த குண்டு வெடிப்பின்போது பூங்காவிலிருந்து தப்பித்த இந்த முதலையை 3 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்த பிரிட்டன் வீரர்கள் அதை ரஷ்யாவிடம் ஒப்படைத்தனர். அதுமுதல் கடந்த 74 ஆண்டுகளாக மாஸ்கோ உயிரியல் பூங்காவில் வளர்ந்த இந்த முதலை வயது முதிர்வின் காரணமாக உயிரிழந்தது.

உலகிலேயே அதிக வயதுடைய முதலைகளில் சாட்டர்னும் ஒன்று என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்