மதுரையில் தவெக மாநில மாநாடு.. தேதியை அறிவித்த விஜய்..!

Mahendran

புதன், 16 ஜூலை 2025 (10:16 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என்று கூறிய அக்கட்சியின் தலைவர் விஜய், தேதியையும் அறிவித்துள்ளது தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
மதுரையில் ஆகஸ்ட் 25ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும் என்று விஜய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 
 
என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம்.
 
தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்கிறேன்.
 
வாகை சூடும் வரலாறு திரும்பட்டும்.
 
வெற்றி நிச்சயம்.
 
நன்றி.
 
முன்னதாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடந்தது என்பதும், அதில் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான தொண்டர்கள் கலந்துகொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்