வாக்னர் குழு தலைவர் இறந்தது உண்மைதான்! – உறுதிப்படுத்திய ரஷ்யா!

Webdunia
திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (09:21 IST)
சமீபத்தில் ரஷ்யாவில் நடந்த விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் அதை ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.



ரஷ்யா உக்ரைன் மீது போர் நடத்தி வரும் நிலையில், இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்த தனியார் ராணுவ அமைப்புதான் வாக்னர் குழு. இதன் தலைவர் பிரிகோஜின். பின்னர் வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பி புரட்சியில் ஈடுபட்டதுடன் சில பகுதிகளையும் கைப்பற்றியது.

பின்னர் பேச்சுவார்த்தைக்கு பின் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவிடமே ஒப்படைத்த வாக்னர் குழு அங்கிருந்து வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரம் ரஷ்யாவில் ஏற்பட்ட விமான விபத்து ஒன்றில் வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோஜின் இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அந்த விமானத்தில் அவர் பயணித்தாரா என்ற சந்தேகங்களும் இருந்து வந்தன.

இந்நிலையில் இறந்தவர்களுக்கு மரபணு சோதனைகள் நடத்தியதில் அதில் பிரிகோஜின் பயணித்தது உறுதியாகியுள்ளதாகவும், அவர் இறந்து விட்டார் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. பிரிகோஜின் மறைவுக்கு பிறகு வாக்னர் குழு தலைவராக யார் பொறுப்பேற்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்