ரஷியாவின் லுனா 25 மிஷன் தோல்வியடைந்ததில் மிகவும் வருத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (10:19 IST)
இந்தியாவின் இஸ்ரோ அனுப்பிய சந்திராயன் 3 மற்றும் ரஷ்யாவின்  லுனா 25 ஆகிய இரண்டு விண்கலங்களும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் சந்திரனை நோக்கி சென்று கொண்டிருந்தன. இந்தியாவின் சந்திராயன் 3 சந்திரனின் பாதையில் சரியாக சென்று கொண்டிருந்த நிலையில் ரஷ்யாவின் லுனா 25 மற்றும் திடீரென நிலவில் மோதி தோல்வி அடைந்தது. இதனால் ரஷ்ய நாடு மிகவும் அதிர்ச்சி அடைந்தது. 
 
இந்த நிலையில் ரஷ்யாவின் லுனா 25 தோல்வி அடைந்தது குறித்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறிய போது நிலவின் தென்துருவத்தை அடையும் முயற்சியில் ரஷ்யா தோல்வி அடைந்து,  இந்தியா வென்று உள்ளது
 
இருப்பினும் ரஷ்யாவின் தோல்வி எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. எல்லோருடைய வெற்றிக்காக தான் நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், செயல்பாடுகளில் கிடைக்கும் தோல்வி என்பது இயற்கையான ஒன்றுதான். 
 
ரஷ்யாவின் லுனா 25 தற்போது தோல்வி அடைந்தாலும் நிச்சயமாக எதிர்காலத்தில் ரஷ்யா மீண்டும் வெற்றிகரமான விண்கலத்தை செலுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்