உக்ரைன் ரயில் நிலையம் மீது ராக்கெட் தாக்குதல்! – 20 பொதுமக்கள் பலி!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (14:43 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தற்போது ரயில் நிலையம் மீது ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்து பல நாட்கள் கடந்துவிட்டது. எனினும் ஓயாமல் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, உக்ரைனின் பல பகுதிகளை கைப்பற்றியுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் மக்கள் பலர் அகதிகளாக பல்வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் உக்ரைனின் கீவ் நகரம் அருகே உக்ரேனிய மக்கள் பலர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது கிழக்கு உக்ரைன் நகரமான கிராமடோர்ஸ்கில் உள்ள ரயில் நிலையம் மீது ரஷ்யா ராக்கெட் வீசி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இந்த தாக்குதலால் 20 பொதுமக்கள் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்