உக்ரைன் - ரஷ்யா போர்: சமையல் எண்ணெய் விலை இருமடங்காக உயர்வு!
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (11:25 IST)
இந்தியாவுக்கு சமையல் எண்ணெய் உக்ரைன் மற்றும் ரஷ்யா நாடுகளில் இருந்துதான் 90 சதவீதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு போர் நீடித்து வருவதால் சமையல் எண்ணெய் இறக்குமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது இதன் காரணமாக சமையல் எண்ணெய் விலை கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது
போருக்கு முன் ரூ.100ஆக இருந்த ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய் விலை தற்போது ரூ.200ஆக விற்பனை செய்யப்படுகிறது. நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.