இஸ்ரேல் பிரதமர் வெற்றி பெற்ற அடுத்த நாளே ராக்கெட் தாக்குதல்: பாலஸ்தீன சதி வேலையா?

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2022 (19:17 IST)
இஸ்ரேல் நாட்டில் தேர்தல் முடிந்து பிரதமராக பெஞ்சமின் நெதன்யாகு என்பவர் தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே பாலஸ்தீன நாட்டில் இருந்து நான்கு ராக்கெட்டுகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இஸ்ரேல் நாட்டில் பிரதமர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போதைய பிரதமரான பெஞ்சமின் மீண்டும் பிரதமராகி உள்ளார். இந்த நிலையில் அவர் மீண்டும் பிரதமராக விரைவில் பதவி ஏற்க இருக்கும் நிலையில் அண்டை நாடான பாலஸ்தீன நாட்டில் இருந்து 4 ராக்கெட்டுகள் அடுத்தடுத்து வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
 
 இந்த தாக்குதலில் உயிர்ச்சேதம் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் பிரதமர் தேர்தல் முடிந்த அடுத்த நாளே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்