விண்ணில் பாய்ந்தது LVM3 ராக்கெட்: இஸ்ரோ சாதனை

ஞாயிறு, 23 அக்டோபர் 2022 (08:12 IST)
விண்ணில் பாய்ந்தது LVM3 ராக்கெட்: இஸ்ரோ சாதனை
இன்று அதிகாலை இஸ்ரோ நிறுவனம் GSLV மார்க் 3 (LVM3 அல்லது GSLV Mk-3) என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாகச் செலுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
 
இன்று அதிகாலை 12.07 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது 
 
இந்த செயற்கைக்கோள் பூமியின் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 
 
அதிவேக இணைய சேவையை வழங்கும் வகையில் இந்த செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது என்றும் இந்த செயற்கைகோள் பிரிட்டனைச் சேர்ந்த ஒன்வெப்  நிறுவனத்தின் இணைய பயன்பாட்டிற்காக இஸ்ரோ தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க பணி என்றும் பிரதமர் மோடியின் ஆதரவால் தான் இது சாத்தியமானது என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்