பிளாஸ்டிக் பொருட்களுக்கு கட்டுப்பாடு: மீறினால் ரூ.20,000 அபராதம்! எங்கு தெரியுமா?

Webdunia
புதன், 2 ஆகஸ்ட் 2023 (12:59 IST)
அமெரிக்க   நாட்டில் பிளாஸ்டிக் பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டில் அதிபர் ஜோ பைடன் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில்,95 சதவீதம் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும்  நெகிழிக் குப்பைககள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது.

எனவே அமெரிக்க நாட்டில் உள்ள முக்கிய நகரமான நியூயார்கில்  ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதில், ஹோட்டல்கள், உணவகங்களில்  நெகிழ்ப் பொருட்கள், கரண்டி, கத்திகள் ஆகியவற்றை  வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது என்றும் இதை மீறும் நிறுவனங்களுக்கு ரூ. 20 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நெகிழிப் பொருட்களை குறைக்கும் வகையில் இந்த்  நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்