சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (14:22 IST)
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சற்றுமுன் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளது. 
 
மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் டிசம்பர் 21, 22 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உண்டு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
தூத்துக்குடி ராமநாதபுரம் சிவகங்கை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை கடலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்