கவர்னர் மாளிகையில் விழுந்த மர்ம பொருள்!? – வெடிகுண்டு தடுப்பு பிரிவு ஆய்வு!

ஞாயிறு, 18 டிசம்பர் 2022 (09:22 IST)
சென்னையில் உள்ள கவர்னர் மாளிகையில் மர்ம பொருள் ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் ரோந்து மேற்கொண்டபோது விருந்தினர் தங்கும் பகுதியில் எரிந்த நிலையில் மர்ம பொருள் ஒன்று கிடப்பதை கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக இதுகுறுத்து சென்னை மாநகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்களுடன் வந்து சோதனை மேற்கொண்ட போலீஸார் எரிந்து கிடந்த பொருள் ட்ரோன் போல இருந்ததால் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பின்னர் ஆய்வில் அது வானிலையை கணிப்பதற்காக அனுப்பப்படும் பலூன் என தெரிய வந்துள்ளது. அது செயலிழந்து இந்த பகுதியில் விழுந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Edit By Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்