கூரையை பிச்சிக்கிட்டு வந்து விழுந்த மலை பாம்பு..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (16:33 IST)
சைனாவில் உள்ள உடல் ஆரோக்கிய நிலையம் ஒன்றின் கூரையை உடைத்துக்கொண்டு 10 அடி மலைப்பாம்பு வந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சைனாவின் கவுங்டாங் மாகாணத்திaன், ஃபோசன் பகுதியில் அமைந்துள்ள ”ஸ்பா” அழகு நிலையத்தில் கடந்த நவம்பர் 12 ஆம் தேதி, கூரையின் மேல் ஒரு விநோத சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஒரு பத்து அடி நீள மலை பாம்பு கூரையை உடைந்து கொண்டு வந்து விழுந்தது.

இதை கண்ட நபர்கள் அலறிக்கொண்டு ஆளுக்கொரு திசையில் ஓடினர். இதனை தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் அந்த பாம்பை லாவகமாக பிடித்து மிருக காட்சி சாலைக்கு கொண்டு சென்றனர்.
கிட்டதட்ட பத்து ஆண்டுகளாக அந்த பாம்பு அங்கே வாழ்ந்திருக்க கூடுமென கூறப்படுகிறது. மேலும் அந்த பகுதியில் உள்ள எலிகளை சாப்பிட வந்ததாகவும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்