50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு..

Arun Prasath

செவ்வாய், 19 நவம்பர் 2019 (12:45 IST)
பாகிஸ்தானில் சுமார் 50,000 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் சமீப காலமாக டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் தற்போது 49,587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்த இரண்டு வாரங்களில் 5,000 க்கு மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் டெங்கு காய்ச்சலால் கடந்த 2011 ஆம் ஆண்டு 370 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும் இந்த வருடம் இறப்பு விகிதம் குறைந்துள்ளாதவும், அதாவது 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெங்குவை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்