உலகில் அதிக காற்று மாசுபட்ட நகரங்களின் பட்டியல் வெளியீடு!

Webdunia
சனி, 8 ஜூலை 2023 (22:47 IST)
உலகில் காற்று மாசுபட்ட நகரங்களில் பட்டியலை  World of Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது.

உலகளவில்  அதிக காற்று அளவீடு மற்றும் மாசுபாடு அடையும் நகரங்களின் பட்டியலை ஆய்வு செய்து World of Statistics நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதன்படி,  ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய்  நகரம் முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானின் கராச்சி இரண்டாம் இடத்தில் உள்ளது.

தோஹா 3 வது இடத்திலும்,  ஜகர்தா 4 வது இடத்திலும், இந்தியாவின் தலைநகர் டெல்லி இப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது.

அதேபோல் ஜோகன்ஸ்பர்க் 6 வது இடத்திலும், ஷாங்காய் 7 வது இடத்திலும், சாண்டியாகோ 8 வது இடத்திலும், குவைத் 9 இடத்திலும், லிமா 10 வது இடத்திலும் உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்