டெல்லி மதுபான கொள்கை முறைகேடு: பிரபல தொழிலதிபரை கைது செய்த அமலாக்கத்துறை

வெள்ளி, 7 ஜூலை 2023 (10:10 IST)
டெல்லி  மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் ஏற்கனவே ஒரு சில அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரபல தொழிலதிபர் தினேஷ் அரோரா அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை அமல்படுத்தியது. இதில் முறைகேடு நடந்ததாகவும் ரூ.2800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டியது. 
 
இது குறித்த வழக்கு விசாரணையில் இருந்து வரும் நிலையில் ஏற்கனவே டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்பட ஒரு சிலர் கைது செய்தனர். 
 
இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் தொழிலதிபர் தினேஷ் அரோரா அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று இரவு 11 மணிக்கு கைது செய்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்