பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு தாக்குதலுக்கு அதிபர் புதின் கண்டனம்!

Webdunia
திங்கள், 26 செப்டம்பர் 2022 (21:57 IST)
ரஷியாவின் இஜவ்ஸ்க் நகரில்  உள்ள பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில்  6 குழந்தைகள்   உள்ளிட்ட 13  பேர் பலியாகியுள்ளனர். இந்த கொடூர சம்பவத்திற்கு அதிபர் புதின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
ரஷிய நாட்டில் உள்ள மத்தியப் பகுதியான இஜவ்ஸ்க்  நகரில் ஒரு பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆயிரக்கணக்கான குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று இப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில், 6 குழந்தைகள் உள்பட 13 பேர் பலியாகினர். மேலும், 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

காய அடைந்தவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்,  பள்ளியில் நடந்த தாக்குதலில் உயிரிழந்த குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள அதிபர் புதின், இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்