மைக்கேல் ஜாக்சன் வீட்டில் ஏகப்பட்ட ஆபாச பட டிவிடிக்கள் : தொடரும் சர்ச்சை

Webdunia
வியாழன், 23 ஜூன் 2016 (16:16 IST)
மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் வீட்டில் ஏகப்பட்ட ஆபாச படங்கள் இருந்ததாகவும், அதைக் காட்டித்தான் அவர் சிறார்களுடன் ஒரினச் சேர்க்கையில் ஈடுபட்டார் என்றும் ஒரு இணையதளம் செய்தி வெளியிட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.


 

 
மைக்கேல் ஜாக்சன் உயிரோடு இருக்கும்போதே அவர் சிறார்கள் பலருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார் என்ற புகார் எழுந்தது. அவர் மீது வழக்கும் தொடரப்பட்டது. அந்த வழக்கிலிருந்து அவர் விடுதலையானார். 2009ஆம் ஆண்டு அவர் மரணமடைந்தார்.
 
இந்நிலையில், ரேடார் ஆன்லைன் என்ற இணையதளம், ஜாக்சன் வீட்டில் ஏராளமான ஆபாசப் படங்கள், வீடியோக்கள் இருந்ததாக செய்தி வெளியிட்டிருக்கிறது. அந்த படங்களை காட்டித்தான் அவர் சிறுவர்களை தன் பக்கம் இழுத்தார் என்று அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.
 
இதற்கு ஜாக்சன் தரப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜாக்சனை அவரது ரசிகர்கள், அவரின் இசைத் திறமையை வைத்து மட்டுமே நினைவு கூர்ந்து வருகின்றனர். அவரது தனிப்பட்ட விவகாரத்தை வெளியிட்டு அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
அடுத்த கட்டுரையில்