போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் இத்தாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். தற்போதைய நிலைமைப்படி, அவருக்கு மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
போப் பிரான்சிஸ் கடந்த பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி, இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இரண்டு நுரையீரலிலும் நிமோனியா தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவருடைய சிறுநீரகத்திலும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டதால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த 3ஆம் தேதி, அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தற்போது அவர் மீண்டும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். நிமோனியா தொற்று காரணமாக, அவரது நுரையீரலில் சளி அதிகமாக சேர்ந்து வருவதாகவும், அது குழாய் மூலம் உறிஞ்சி எடுக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.