போப்பாண்டவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தியிருப்பதாக வடிகான் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அவருடைய உடல்நிலை மேம்பட வேண்டும் என விரும்பி, வடிகான் சதுக்கத்தில் சமீபத்தில் கூட்டு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் குளிரையும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.