ஏழை நாடுகளில் 0.3 சதவீதம் மட்டுமே தடுப்பூசி கிடைத்துள்ளது! உலக சுகாதார நிறுவனம் வருத்தம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (08:44 IST)
கொரோனாவுக்கான தடுப்பூசி ஏழை நாடுகளில் சுமார் 0.3 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

2019 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து தற்போது வரை உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா. இதற்கான தடுப்புப் பணிகளில் ஒன்றாக கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அந்த தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு சுமார் 0.3 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.

இதுவரை 100 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்ட நிலௌயில் 82 சதவீத டோஸ்கள் உயர், மேல் மற்றும் நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்