போலந்து: 190 பயணிகளுடன் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
திங்கள், 23 ஜனவரி 2023 (17:54 IST)
போலந்து நாட்டில் இருந்து கிரீஸ் நோக்கிச் சென்ற ரயன் ஏர் என்ற விமானம் 190 பயணிகளுடன் சென்ற நிலையில், அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட  சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலந்து நாட்டில் இருந்து கிரீஸ் நோக்கி  190 பயணிகளுடன்  சென்ற ‘’ரயன் ஏர்’’ என்ற விமானம் வானி பறந்து கொண்டிருந்தது.

அப்போது, திடீரென்று, விமானத்தில் வெடிகுண்டு இருப்பதால ஒரு தகவல் கிடைத்ததை அடுத்து, விமானம் உடனடியாக ஏதேன்ஸ் விமான  நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

அந்த விமானத்திலும் அனைத்து பயணிகளிடத்திலும்  அதிகாரிகள் சோதனை நடத்தினார். ஆனால், வெடிகுண்டு மற்றும் சந்தேகத்திற்கு இடமான முறையில் எந்த பொருட்கள் கிடைக்கவில்லை என்பதால் மிரட்டல் பொய் என்று
அதிகாரிகள் உறுதி செய்தனர்.

அதபின்னர், சில மணி நேரங்கள் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்