அபராதம் கட்றியா.. முத்தம் தறியா? – வழிந்த காவலர் பணியிடை நீக்கம்!

Webdunia
வெள்ளி, 19 பிப்ரவரி 2021 (13:42 IST)
பெரு நாட்டில் கொரோனா விதிகளை மீறிய பெண்ணிடம் முத்தம் கேட்ட காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் உள்ள நிலையில் பல நாடுகளில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா விதிமுறைகளை மீறுவோருக்கு அபராதம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளையும் பல நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் பெரு நாட்டிலும் கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன.

இந்நிலையில் பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் இளம்பெண் ஒருவர் கொரோனா விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. இதனால் அந்த பெண்ணை பிடித்து விசாரித்த காவலர் அபராதம் ஏதும் விதிக்கப்படக்கூடாது என்றால் தனக்கு முத்தல் கொடுக்க வேண்டும் என வற்புறுத்தியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டதையடுத்து அந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்