ஐயோ!!! பிளாஸ்டிக்கை உண்ணும் மனிதர்கள் : பகீர் தகவல்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (19:27 IST)
ஆஸ்திரேலியாவில் உள்ள புகழபெற்ற பல்கலைக்கழகம் ஒன்று அண்மையில் நடத்திய ஆய்வில் மனிதர்கள் தங்களுக்கு தெரியாமல் கிரடிட் கார்ட் அளவிலான பிளாஸ்டிக் பொருட்களை உட்கொள்வதாக தெரிவித்துள்ளது. இது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, நாம் நாள்தோறும் மிகச்சிறந்த அளவிலான 2000  பிளாஸ்டிக் துகள்களை நமக்கே தெரியாமல் உண்னுகிறோம். அதன் எடை சுமார் 21 கிராம் அளவு ஆகும். இதை நாம் ஒருவருடத்திற்கு எடுத்துக்கொண்டால் அதன் அளவும் 250 கிராம் என்கிறது ஆய்வு.
 
மேலும் இந்த ஆய்வை உலக வனவிலங்கு நிதி அமைப்பானது (world wild life fund)  50 வகையன தகவல்களை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்துள்ளது. இதன் முடிவில் பிளாஸ்டிக் சூழலியல் அமைப்ப்பனது கடும் அச்சத்துக்கு உள்ளாகி இருப்பதாகவும் அது எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்