பரபரப்பான ஆட்டத்தில் தோல்வி அடைந்த பாகிஸ்தான்

புதன், 12 ஜூன் 2019 (22:37 IST)
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 307 ரன்கள் குவித்தது. 308 என்ற இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் வெற்றி அடையும் என எதிர்பார்த்த நிலையில் திடீரென விக்கெட்டுக்கள் வீழ்ந்ததால் 266 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வி அடைந்தது.

44 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு 45 ரன்களே தேவையாக இருந்தது. 36 பந்துகளில் 3 விக்கெட்டுக்கள் கையில் இருந்த நிலையில் சர்ஃபாஸ் அகமது, வாஹிப் ரியாஸ் ஆகிய இருவரும் அருமையாக விளையாடி கொண்டிருந்தனர். ஆனால் 45வது ஓவரில் வாஹிப் அவுட் ஆனவுடன் அதன் பின்னர் இரண்டு விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து விழுந்ததால் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.
 
ஸ்கோர் விபரம்:
 
ஆஸ்திரேலியா: 307/10  49 ஓவர்கள்
 
வார்னர்: 107
பின்ச்: 82
மேக்ஸ்வெல்: 20
கார்ரே: 20
 
பாகிஸ்தான்: 266/10  45.4 ஓவர்கள்
 
இமாம் உல் ஹக்: 53
முகமது ஹபீஸ்: 46
வாஹிப் ரியாஸ்: 45
சர்ஃபாஸ் அகமது: 40
 
ஆட்டநாயகன்: டேவிட் வார்னர்
 
நாளைய போட்டி: இந்தியா மற்றும் நியூசிலாந்து

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்